Watch: பால் குடிக்க வந்தது குத்தமா? கேனில் தலை சிக்கி தவித்துப்போன நாய்; பத்திரமாக மீட்ட அதிகாரிகள்.!



  Tiruvannamalai Dog Struck in Milk Can 

வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், எப்போதும் நம்முடன் அன்பாக பழகும் குணம் கொண்டவை. நம்முடன் எப்போதும் துள்ளல் மகிழ்ச்சியுடன் விளையாடி, நம்மையும் மகிழவைக்கும். 

ஒருசில நேரம் அதிக சேட்டை எண்ணம் கொண்ட நாய்கள், உணவுக்காக ஆசைப்பட்டு சில விபரீதத்தில் சிக்கிக்கொள்ளும். அப்படியாக ஒரு சம்பவம் திருவண்ணாமலையில் நடந்துள்ளது. நல்வாய்ப்பாக நாய் உயிர்தப்பியது.

பால் கேனில் சிக்கி தவித்த நாய்

இதையும் படிங்க: மின்கசிவால் பகீர்; திடீரென வெடித்து சிதறிய ஏசி மெக்கானிக் கடை.. தீப்பிழம்பை கண்டு தெறித்தோடிய மக்கள்.!

திருவண்ணாமலையில் நாய் ஒன்று பால் கேனில் சிக்கிக்கொண்ட நிலையில், அங்கும் - இங்குமாக உலா வந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், நாயின் கழுத்து வரை சிக்கிக்கொண்ட பால் பாத்திரத்தை நறுக்கி, நாயை பத்திரமாக மீட்டனர். இதனால் நாய் ஆஸ்வாசமடைந்தது.

இதையும் படிங்க: காணும் பொங்கலை கலவரமாக்கிய போதை கும்பல்; தட்டிக்கேட்ட திமுக பிரமுகரின் மண்டை உடைப்பு..!