காணும் பொங்கலை கலவரமாக்கிய போதை கும்பல்; தட்டிக்கேட்ட திமுக பிரமுகரின் மண்டை உடைப்பு..!



  in Tiruvannamalai Chetpat Drug Gang Atrocity 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு, சித்தாத்தூரை, தேவிகாபுரம் பகுதியில் காணும் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, அங்குள்ள முத்தாலம்மன் கோவில் திருவிழாவுடன் பண்டிகை சிறப்பிக்கப்பட்டது. 

அச்சமயம், அங்கு வந்த தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் அட்டகாசம் செய்துள்ளனர். இதனைக்கண்ட உள்ளூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் ராஜசிம்மன், கஞ்சா கும்பலை கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த நபர் திமுக பிரமுகரின் மண்டையை உடைத்து இருக்கிறார். 

4 பேர் காயம், மருத்துவமனையில் அனுமதி

மேலும், தனது நண்பர்களுக்கு செல்போனில் அழைப்பு விடுக்கவே, அங்கு ஆட்டோவில் வந்த போதை கும்பல் திமுக பிரமுகர் உட்பட 4 பேரை கடுமையாக தாக்கி இருக்கிறது. இதனையடுத்து, ஊர் மக்கள் கூடியதால் அங்கிருந்து கும்பல் தப்பிச் சென்றது. மேலும், காயமடைந்த நபர்கள் விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: தாயின் கண்முன் 15 வயது சிறுமி பலி; குளத்தில் மூழ்கி மரணம்.!

இன்று காலை உள்ளூர் மக்கள் போதை கும்பலை கைது செய்யவும், போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தவும் வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையைதொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட கும்பலுக்கு வலைவீசப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாயின் கண்முன் 15 வயது சிறுமி பலி; குளத்தில் மூழ்கி மரணம்.!