மின்கசிவால் பகீர்; திடீரென வெடித்து சிதறிய ஏசி மெக்கானிக் கடை.. தீப்பிழம்பை கண்டு தெறித்தோடிய மக்கள்.!



  in Tiruvannamalai AC Mechanic Shop fire 

திருவண்ணாமலை மாவட்டம், கட்டபொம்மன் நகரில், பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமாக ஏசி மெக்கானிக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஏசி, குளிர்சாதன பெட்டி உட்பட எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுது பார்த்து தரப்படுகிறது. 

இதனிடையே, சர்விஸ் சென்டரை இன்று வழக்கம்போல காலையில் திறந்த பாஸ்கரன், உதிரி பாகம் ஒன்றை வாங்க வேறொரு கடைக்கு சென்றுள்ளார். 

மின்கசிவு காரணமாக விபத்து

அப்போது, திடீரென மின்கசிவு காரணமாக கடைக்குள் புகை வரத் தொடங்கியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தில் கடை வைத்திருப்போர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குளிருக்கு மூட்டிய தீ துணியில் பற்றி மூதாட்டி பலி; நொடியில் நடந்த சோகம்.!!

பாஸ்கரனும் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த நிலையில், கடைக்குள் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பின் சிலமணிநேரம் போராடி தீயணைப்பு & மீட்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விசாரணையில், ஏசி காம்ப்ரஸர் வெடித்தது தெரியவந்தது. மின்கசிவு காரணமாக தீப்பிடித்து கடையில் இருந்த பொருட்கள் சாம்பலாகியுள்ளன.

இதையும் படிங்க: காணும் பொங்கலை கலவரமாக்கிய போதை கும்பல்; தட்டிக்கேட்ட திமுக பிரமுகரின் மண்டை உடைப்பு..!