திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
#Breaking: "நாளை முக்கிய அறிவிப்பு" - தமிழ்நாடு முதல்வர் கொடுத்த சஸ்பென்ஸ்.. எதிர்பார்ப்பில் தமிழர்கள்.!

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில், இரும்பின் தொன்மை நூல் வெளியிடப்படும் நிலையில், நூல் வெளியீட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரும்பின் தொன்மை என்ற நூல் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினால் வெளியிடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: அப்படிப்போடு.. பெண்களுக்கு எதிரான குற்றம்.. இனி 5 ஆண்டு சிறை.. சட்டத்திருத்தம் தாக்கல்.!
நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது!
— M.K.Stalin (@mkstalin) January 22, 2025
வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்!@TThenarasu https://t.co/umbpC8ZmLs
இந்நிலையில், நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகவிருக்கிறது என தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தகவல் தெரிவித்து இருக்கிறது. இதனால் அந்த அறிவிப்பு என்ன? எது சார்ந்த அறிவிப்பாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக இன்று மதுரை அரிட்டாபட்டி விவசாயிகளுடன் மத்திய அமைச்சரை சந்தித்த பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, நாளை மேலூர் மக்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது டங்ஸ்டன் சுரங்க அனுமதி ரத்து என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: #Breaking: தமிழகத்தை உயர்கல்வியில் இருந்து கீழே தள்ள முயற்சி? - முதல்வர் முக ஸ்டாலின் கடும் கண்டனம்.!