#Breaking: அப்படிப்போடு.. பெண்களுக்கு எதிரான குற்றம்.. இனி 5 ஆண்டு சிறை.. சட்டத்திருத்தம் தாக்கல்.!



TN CM MK Stalin Introduce Law Change on Women Safety 

 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெறும் நிலையில், அதிமுக அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை கையில் எடுத்து, அரசுக்கு எதிராக கேள்விகளை முன்வைத்து வருகிறது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுத்தரப்பு அதற்கு பதில்களை வழங்கி இருக்கிறது. குற்றவாளியை தப்பிக்க விடமாட்டோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்திருத்தம் அறிமுகம்

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், பெண்களுக்கு எதிராக குற்றம் புரிவோரை கடுமையாக தண்டிக்கும் வகையில், பெண்களை உள்நோக்க எண்ணத்துடன் பின்தொடர்ந்தால், பிணையில் வெளியே வராத வகையில் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் சட்டதிருத்தத்தை முதல்வர் அறிமுகம் செய்துள்ளார். 

இதையும் படிங்க: #Breaking: தமிழகத்தை உயர்கல்வியில் இருந்து கீழே தள்ள முயற்சி? - முதல்வர் முக ஸ்டாலின் கடும் கண்டனம்.!

5 முதல் 10 ஆண்டுகள், ஆயுள் தண்டனை

இதன்வாயிலாக பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். ஆசிட் வீச்சு போன்ற விஷயங்களுக்கும் குறைந்தபட்ச சிறை தண்டனை 10 ஆண்டுகளாகவும், ஆயுள் தண்டனை விதிக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த சட்ட மசோதா குறித்த விவாதம் நாளை அவையில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து சட்டம் நிறைவேற்றப்படும்.

 
 

 

 

இதையும் படிங்க: "மாணவிகளின் கல்வியை கெடுத்துறாதீங்க" - முதல்வர் முக ஸ்டாலின் கலங்கி, உருக்கமான பேச்சு.!