#Breaking: தமிழகத்தை உயர்கல்வியில் இருந்து கீழே தள்ள முயற்சி? - முதல்வர் முக ஸ்டாலின் கடும் கண்டனம்.!



MK Stalin on UGC New Changes 09 January 2025 

 

மத்திய அரசு யுஜிசி-ல் திருத்தப்பட்ட விதிகளை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல, இந்த திருத்தும் வாயிலாக துணை வேந்தரை ஆளுநர் நியமனம் செய்யலாம் என்ற மாற்றமும் வரும். ஏற்கனவே ஆளுநர் - தமிழ்நாடு அரசு இடையே கருத்துமுரண், பிரச்சனைகள் நிலவி வரும் சூழலில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரும் பேசுபொருளாகியுள்ளது.

உயர்கல்வியின் நிலை என்ன?

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், "கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு; உதவித்தொகை – ஊக்கத்தொகை - கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள் இவ்வளவையும் நாங்கள் செய்ய, எம் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த ஆளுநர்! இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநரே நியமிக்கலாம் என்று யுஜிசி தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை?

இதையும் படிங்க: "மாணவிகளின் கல்வியை கெடுத்துறாதீங்க" - முதல்வர் முக ஸ்டாலின் கலங்கி, உருக்கமான பேச்சு.! 

நீதிமன்றத்தை நாடி போராடுவோம்

தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான். இதனை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்! வெல்வோம்!" என தெரிவித்துள்ளார்.


 

இதையும் படிங்க: #Breaking: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்; முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம்.!