7.5% இடஒதுக்கீடு விவகாரம்; சரிபார்ப்பு பணியில் அரசு.. காரணம் என்ன?



TN Govt Checking 7.5 Percentage reservation

தமிழ்நாடு மாநில கல்வி வழியில், அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உட்பட உயர்கல்வியில் சேர 7.5% உள்ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விபரம், எமிஸ் தளத்தில் பதிவுக்கு செய்யப்பட வேண்டும் என கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விஷயம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சசிகலா, மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

இதையும் படிங்க: TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் 2025: திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காக அசத்தல் அறிவிப்பு.. விபரம் இதோ.!

Tn govt

அந்த அறிக்கையில், "7.5 % இடஒதுக்கீட்டில் 2024 - 2025 கல்வியாண்டில் சுமார் 1835456 மாணவர்கள் விபரங்கள் சரிபார்ப்பது, 24646 மாணவர்களின் விபரங்களை பதிவு செய்தல் தொடர்பான பணிகள் நிலுவையில் இருக்கின்றன.

இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படாமல் உள்ள 10, 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசி வழங்க இயலாது. எமிஸ் இணையம் வாயிலாக இடஒதுக்கீடு சரிபார்த்தல் பணிகள் நடைபெறவிருப்பதால், தமிழ்வழி, ஆங்கிலவழி கல்வி விபரங்கள் குறித்து ஆசிரியர்கள் சரிபார்த்து, பட்டியலை விரைந்து ஒப்படைக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சமூக நல்லிணக்கத்தை கடைபிடித்தால் ரூ.1 கோடி பரிசுத்தொகை; அதிரடி அறிவிப்பு.!