TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் 2025: திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காக அசத்தல் அறிவிப்பு.. விபரம் இதோ.!



TN Budget 2025 Transgender Schemes Announcement 

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 - 2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல், இன்று நடைபெற்றது. சட்டப்பேரவை அறிவிப்புகளை மக்கள் தெரிந்துகொள்ள மொத்தமாக 932 இடங்களில், சிறப்பு காணொளி நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று பல்வேறு புதிய திட்டங்களும் மக்களுக்காக அறிவிக்கப்பட்டன. இந்த திட்டங்கள் வரும் காலத்தில் செயல்படுத்தப்படும்.

புதுமைப்பெண் திட்டம் நீட்டிப்பு

அந்த வகையில், மகளிர் நலனுக்கான ரூ.13000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மூன்றாம் பாலினத்தவருக்கும் உரிய சமூக நீதி கிடைக்கும் பொருட்டு, அவர்களுக்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் மூன்றாம் பாலினத்தவருக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: TN Budget 2025: கலைஞர் உரிமை தொகை ரூ.1000 - வெளியானது புதிய அறிவிப்பு.!

ஊர்க்காவல் படையில் திருநங்கைகள்

தேர்வு செய்யப்படும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், ஊர்க்காவல் படையில் திருநங்கைகள் இணைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்கென வழங்கப்படும் ஊதியம், ஊர்க்காவல் படை வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் அடிப்படையில் இருக்கும். எந்த விதமான சமூகநீதி நிலையின்மைக்கும் இங்கு இடம் இல்லை. சோதனை முயற்சியாக முதலில் 50 திருநங்கைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, பின் படிப்படியாக திட்டத்தின் செயல்பாடுகள் அதிகரிக்கப்படும். 

இதையும் படிங்க: TN Budget 2025: பரந்தூரில் விமான நிலையம் உறுதி.. ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையத்திற்கு ஏற்பாடு.!