சமூக நல்லிணக்கத்தை கடைபிடித்தால் ரூ.1 கோடி பரிசுத்தொகை; அதிரடி அறிவிப்பு.!



 TN Budget 2025 SOcial Justice Villages Award and Reward 


2025 - 2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்றது. சட்டப்பேரவை அறிவிப்புகளை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், மொத்தமாக 932 இடங்களில், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு காணொளி நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அடுத்த 25 ஆண்டுகளை கருத்தில் கொண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று பல்வேறு புதிய திட்டங்களும் மக்களுக்காக அறிவிக்கப்பட்டன. இந்த திட்டங்கள் வரும் காலத்தில் செயல்படுத்தப்படும் என்பதால், அதனை எதிர்பார்த்து மக்களும் காத்திருக்கின்றனர். குறிப்பாக சமூக நீதி, சமத்துவம் போன்ற விஷயங்களை முன்னெடுக்கும் விதமாக, புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

சமூக நல்லிணக்கத்தை கடைபிடித்தால் பரிசுத்தொகை

அதாவது, ஊராட்சி நிர்வாகிகளில், சமூகநீதியை பின்பற்றி செயல்படும் நிர்வாகத்தில், சிறந்த 10 நிர்வாகத்தை தேர்வு செய்து ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் சமூகநீதியை நிலைநாட்டியமைக்காக சான்றிதழ் வழங்கி ஊராட்சி நிர்வாகம் கௌரவிக்கப்படும். இந்த திட்டத்துக்காக ஊராட்சிக்கு ரூ.1 கோடி வீதம், 10 ஊராட்சிக்கு ரூ.10 கோடி செலவிடப்படும்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களுக்கு உற்சாக செய்தி.. லேப்டாப், டேப்லெட், கல்விக்கடன் வசதிகள்.. பட்ஜெட்டில் அறிவிப்பு.!

இதையும் படிங்க: அரசுப்பணியாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. என்னென்ன? விபரம் இதோ.!