மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு; விண்ணப்பிக்க விபரம் உள்ளே.!
சமீபத்தில் பத்து மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதனையடுத்து, பொதுத்தேர்வை முடித்த மாணவர்கள், தங்களின் எதிர்கால படிப்பினை தேர்வு செய்ய தயாராகி வருகின்றனர். மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களிடம் இருந்து பொறியியல் மற்றும் அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
மருத்துவ பட்டம் & பட்டய படிப்புகளுக்கான விண்ணப்பிக்க
இந்நிலையில், 2024 - 2025ம் கல்வியாண்டு தொடங்கவுள்ளதால் மருத்துவ கல்வி இயக்குனரகம் மருத்துவ பட்டம் மற்றும் பட்டய படிப்புககளுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டுகோள் வைத்துள்ளது. இன்று மதியம் 12 மணிமுதல் ஜூன் மாதம் 21ம் தேதி வரையில் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மதியம் 1 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
அரசின் இணையத்தளம்
இதுகுறித்த உத்தரவை வெளியிட்டுள்ள மருத்துவ கல்வி இயக்குனரகம், மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் tnmedicalselection.net என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டுகோள் வைத்துள்ளது. நண்பகல் 12 மணிமுதல் இணையம் விண்ணப்பங்களை என்பதால், 12 மணிக்கு மேல் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் பூர்த்தி செய்யலாம்.
இதையும் படிங்க: #Breaking: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் முக்கிய உத்தரவு..!