மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் முக்கிய உத்தரவு..!
2024 - 2025ம் கல்வியாண்டு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. கோடை விடுமுறை மற்றும் 2024 மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் விறுவிறுப்பு பெற்றுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை
தமிழ்நாடு மாநில கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பாடபுத்தகங்கள் பள்ளிகள் திறந்ததும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், மாவட்ட அளவிலான முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: கோடை விடுமுறையில் இதெல்லாம் நடத்தக்கூடாது.. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிரடி அறிவிப்பு.!
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
அதன்படி, மே மாதம் 31ம் தேதிக்குள் மாவட்ட அளவில் உள்ள பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் மற்றும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். மின்கசிவு மற்றும் மழை காரணமாக புத்தகங்கள் சேதம் ஆகாமல் பாதுகாக்கும் வகையில் பாடப்புத்தகத்தை பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும். மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்ட பின் எமிஸ் தலத்தில் பதிவு செய்ய வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லாரி - இருசக்கர வாகனம் மோதி விபத்து; இளைஞர் பரிதாப பலி.!