திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தாய்ப்பாசத்தால் கொலையாளியான 17 வயது மகன்.! தாயை கண்முன் அடித்த ரௌடியை நண்பருடன் சேர்த்து கொன்ற பயங்கரம்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் வசித்து வருபவர் பரணி (28). இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். பரணியின் மீது கோட்டை, காந்தி மார்க்கெட் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
காதல் திருமணம்
அப்பகுதியில் வசித்து வந்த கணவரை பிரிந்த 45 வயது பெண் ஜோதிக்கும் - பரணிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாகி, பின்னாளில் இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கு ஒன்றில் சிக்கிய பரணி, மார்ச் மாதம் சிறைக்கு சென்று வெளியே வந்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகும் காங்கிரஸ் எம்.பி.?! நெருங்கிய வட்டத்தில் இருந்து கசிந்த தகவல்.!
தாயின் நிலையை பொறுக்க இயலாத மகன்
அப்போதில் இருந்து பரணி - பெண்மணி ஜோதி இடையே தகராறு நடந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் சண்டையில் பரணி ஜோதியை தாக்கி இருக்கிறார். ஜோதிக்கு மாதேஷ் என்ற 17 வயது மகன் இருக்கும் நிலையில், தாய்க்கு நடந்ததை கண்முன் பார்த்த மகன் கொதித்துபோயுள்ளார்.
சரமாரியாக குத்திக்கொன்ற நண்பர்கள்
பின் மாதேஷ் தனது நண்பர் முகமது தௌபீக் என்பவருடன் சேர்ந்து பரணியை கத்தியால் சரமாரியாக குத்திகோதை செய்தனர். இந்த சம்பவத்தில் பரணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், தலைமறைவான இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மலக்குடலில் மறைத்து வைத்து ரூ.70 இலட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்; திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய குருவி.!