திருச்சியில் அதிர்ச்சி... அள்ள அள்ள போதை மாத்திரைகள்.!! ஒருவர் கைது.!!



trichy-palakarai-police-arrested-a-man-for-selling-drun

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப் பொருள் விற்பனை

திருச்சி, பால் பண்ணை அருகே போதைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக பாலக்கரை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓட முயன்றது. அப்போது அவர்களை துரத்திச் சென்ற காவல் துறையினர் அந்த கும்பலை சேர்ந்த ஒரு நபரை கைது செய்தனர்.

tamilnadu

2000 போதை மாத்திரைகள் பறிமுதல்

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் உறையூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் சாதிக் என தெரியவந்துள்ளது. மேலும் அவரிடமிருந்து 2000 போதை மாத்திரைகள், மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் போன்றவையும் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: 23 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தப்பியோடிய நபர்களுக்கு வலைவீச்சு

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை சிறையிலடைத்தது. மேலும் தப்பியோடிய 3 குற்றவாளிகளையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி நகரில் சமீபத்தில் அதிகரித்துள்ள போதை பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை பெற்றோரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

இதையும் படிங்க: #JustIN: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!