தனிமையில் உல்லாசம்... கள்ள உறவில் வாக்குவாதம்.!! இளம் பெண் கொடூர கொலை.!!



woman-murdered-over-an-argument-in-an-illegal-relations

கடலூர் மாவட்டத்தில் தகாத உறவு காரணமாக இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபருடன் தகாத உறவு

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபாவதி. 33 வயதான இவருக்கு பாஸ்கர் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாஸ்கர் இறந்துவிட்டார். இதன் பிறகு பிரபாவதி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது பிரபாவதிக்கு சம்பத் என்ற இளைஞருடன் கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது.

tamilnadu

கொலையில் முடிந்த வாக்குவாதம்

கள்ள உறவிலிருந்த சம்பத் மற்றும் பிரபாவதி ஆகியோர் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாவதி மற்றும் சம்பத் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த சம்பத் பிரபாவதியை கட்டையால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரபாவதியின் உடலை என்எல்சி சுரங்கத்தில் தள்ளி விட்டு தப்பிச் சென்றிருக்கிறார் சம்பத்.

இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... 14 வயது மாணவியை கர்ப்பமாக்கிய உறவினர்.!! காவல்துறை விசாரணை.!!

கொலையாளி கைது

இந்நிலையில் என்எல்சி சுரங்கத்தில் உள்ள பள்ளத்தில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் சம்பத், பிரபாவதியை கொலை செய்து பள்ளத்தில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "நம்மள நிம்மதியா விடமாட்டாங்க.. " குடும்பத்தார் எதிர்ப்பு.!! கள்ளக்காதல் ஜோடி தற்கொலை.!!