பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
பேருந்துக்கு அடியில் கண்ட காட்சி.. பரபரவென ஓடிய பெண்.. கொத்தாக பிடித்த பயணிகள்.!
சத்துணவு ஊழியர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும், திக்கணங்கோடு கிழக்கு தாராவி பகுதியில் வசித்து வரும் சுனில் குமார் என்பவருக்கு சுபஜா எனும் மனைவி இருக்கின்றார். அவர் தற்போது, ஒப்பந்த அடிப்படையில் அரசு பள்ளி ஒன்றில் சத்துணவு பணியாளராக இருந்து வருகிறார். அவர் நேற்று முன் தினம் பேருந்தில் பயணித்துக் கொண்டு இருந்துள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய அவர் தனது பையை திறந்து பார்த்துள்ளார்.
காணாமல் போன பணம்
தான் வைத்திருந்த 21,000 பணம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஒரு ஆட்டோ பிடித்து தான் வந்த பேருந்தை பின் தொடர்ந்து சென்று, பேருந்தை மறித்தார். டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரிடமும் தன் பணம் காணாமல் போனது பற்றி தெரிவித்து பேருந்தில் சோதனை செய்ய முயன்றுள்ளார். பேருந்தில் உள்ள அனைத்து பயணிகளையும் சோதனை செய்ய போலீஸ் ஸ்டேஷன்க்கு பேருந்தை ஓட்டி செல்ல கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: "ஒரு நொடி பொறுமையா வந்திருக்கலாமே?".. கார் - இருசக்கர வாகனம் மோதி இளைஞர் பலி., முந்திச்சென்று சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
தப்பித்து ஓடிய பெண்
அப்போது சக பயணிகளில் ஒரு பெண் பேருந்தில் இருந்து அவசர அவசரமாக இறங்க முயற்சித்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட அவரை சுற்றி வளைத்து, சோதனை செய்தனர். அவரிடம் பணம் எதுவும் இருக்கவில்லை. ஆனால், அவரது இருக்கைக்கு கீழே 21 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு
போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சமீர் வியாஸ் பகுதியில் வசிக்கும் பரமசிவம் என்பவரின் மனைவி கருப்பாயி (வயது 40) என்பது தெரியவந்துள்ளது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பேருந்து நிறுத்தப்பட்டு அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: "ஆசைக்கு இணங்கு" நிதிநிறுவன மேலாளரின் அதிர்ச்சி செயல்., போலி பிடியாணை பிறப்பித்து பாலியல் தொல்லை.!