ஏ.ஆர் ரகுமான் இளமையாக இருப்பதற்கு காரணம் இதுதானா..! அவரே கூறிய உண்மை.!?
காதலியை நண்பனுக்கு விருந்தாகிய ரவுடி.. கொலையில் முடிந்த கள்ள உறவு.!! அதிர்ச்சி பின்னணி.!!
சேலம் மாவட்டத்தில் கள்ளக்காதலில் இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 2 ரவுடிகளிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் நிலையத்தில் புகார்
நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மலர் என்ற பெண் துடைப்பம் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்கு சேலம் செல்வதாக கணவரிடம் கூறிச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. மேலும் இவரது கணவர் மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது அந்தப் பெண் மருத்துவமனைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மலரின் கணவர் இது தொடர்பாக சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கொலை குற்றவாளிகள் கைது
அவரது புகாரை தொடர்ந்து காவல்துறையின் நடத்திய தேடுதல் வேட்டையில் மலரின் சடலம் ஏற்காடு மலையடிவாரத்தில் இருந்து மீட்கப்பட்டது. மேலும் மலர் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக சேலம் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறை குற்றவாளிகளை தேடி வந்தது. இந்நிலையில் மலையடிவாரத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சேலத்தைச் சேர்ந்த ரவுடிகளான கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளி சக்திவேல் ஆகியோர் மலரை கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... அள்ள அள்ள போதை மாத்திரைகள்.!! ஒருவர் கைது.!!
விசாரணையில் வெளியான உண்மை
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மலரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் பூண்டு வியாபாரம் செய்து வந்த ரவுடி கனகராஜூக்கு மலருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி மருத்துவமனைக்கு செல்வதாக பொய் சொல்லி விட்டு வந்த மலர், கனகராஜை சந்தித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கனகராஜ் மற்றும் மலர் ஆகியோர் ஏற்காடு மலையடிவாரத்தில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கனகராஜின் நண்பன் சக்திவேலும், மலரிடம் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டிருக்கிறார். அப்போது கனகராஜ் சக்திவேல் மற்றும் மலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ் மற்றும் சக்திவேல் ஆகியோர் மலரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது சடலத்தை ஏற்காடு மலையடிவாரத்தில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: #Breaking: 23 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!