வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவரகம்; பெண் கைது, குழந்தை மீட்பு.!



Vellore Govt Hospital Missing New Born Baby Rescued 

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அங்குள்ள அரவட்லா மலைக் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்ற நபரின் மனைவி சின்னி தம்பதி பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்டார். கடந்த ஜூலை 27ம் தேதி இரவில் பிரசவத்திற்காக அனுமதியான பெண்ணுக்கு, ஜூலை 28ம் தேதி காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

பின் காலை நேரத்தில், 7 மணியளவில் கோவிந்தன் தனது மனைவி மற்றும் மாமியாருக்கு உணவு வாங்கிக்கொடுத்துவிட்டு, பின் வார்டில் இருந்து வெளியே சாப்பிட சென்றுள்ளார். அச்சமயம், குழந்தை அழுதுகொண்டு இருக்க, அங்கு வந்த மர்ம பெண் குழந்தையை பார்ப்பதக்க வாங்கி இருக்கிறர். 

இதையும் படிங்க: முன்னாள் கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை; மயிலாடுதுறையில் அதிர்ச்சி.!

கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

இதனால் சின்னி சாப்பிட தொடங்கிய நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் பெண் குழந்தையுடன் மாயமானார். இந்த விஷயம் குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமிரா அடிப்படையில் பெண் பெங்களூர் சென்றது தெரியவந்தது. 

இதனையடுத்து, பெங்களூர் சென்ற தனிப்படை அதிகாரிகள் குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும், குழந்தையின்மை காரணமாக அவதிப்பட்ட தம்பதிக்கு, குழந்தையை கடத்திக்கொண்டு வந்தது தெரியவந்தது. இந்த விஷயம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: முன்னாள் காதலனை கரம்பிடிக்க கணவரை பலிகொடுத்த மனைவி; 18 வயது மகனும் உடந்தையாக பகீர் சம்பவம்.!