மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னாள் கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை; மயிலாடுதுறையில் அதிர்ச்சி.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, விநாயகர் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார் (வயது 42). இவர் தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
பொறையாறு ரோட்டரி சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். சொந்தமாக வாடகை பாத்திரக்கடை நடத்தி வருவதுடன், ஜோதிடமும் பார்த்து வந்துள்ளார். இவரின் மனைவி நிர்மலா தேவி. தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 26ம் தேதி இரவு நேரத்தில் தரங்கம்பாடி கடற்கரையில் இருக்கும் மாசிலாமணிநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
இதையும் படிங்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு; இன்றைய விலை நிலவரம் இதோ.!
கோவிலுக்கு சென்றவரை கொளுத்திய பயங்கரம்
அச்சமயம் அங்கு வருகை தந்த மர்ம நபர்கள், அருண் குமாரின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து இருக்கின்றனர். இதனால் படுகாயமடைந்த அருணின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்தனர்.
பின் அவர் மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை அந்தாதி வருகிறார்கள்.
இதையும் படிங்க: சென்னையில் போதை ஆசாமி கும்பலால் யூடியூபருக்கு நேர்ந்த சம்பவம்; அதிரவைக்கும் வீடியோ வைரல்.!