பிரதமர் கைவிலங்கிடப்பட்ட கார்ட்டூன்.. விகடன் இணையப்பக்கம் முடக்கம்? குவியும் கண்டனம்.!



vikatan-websites-may-blocked

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பினார். பிரதமரின் அமெரிக்க பயணத்தில், அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்புடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. 

இதனிடையே, அமெரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, இந்தியாவுக்கு இந்தியர்கள் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவர்கள் கைவிலங்கிடப்பட்டு அனுப்பப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், அதுசார்ந்த உரையாடல் இடம்பெறவில்லை. 

இதையும் படிங்க: வெளில போடா நாயே.. திமுக பிரமுகரின் முகத்தில் காரி உமிழ்ந்த நிர்வாகி.. சாதி ரீதியாக இழிவுபடுத்தி அநீதி செயல்.! 

இந்நிலையில், இதனை விமர்சித்து தமிழ்நாட்டில் நூற்றாண்டுகள் பெருமை கொண்ட விகடன் குழுமம் கார்டூன் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்த விசயத்திற்கு தமிழக பாஜக உட்பட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே, விகடன் இணையப்பக்கத்தை பலரால் உபயோகம் செய்ய முடியவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

இதனால் தங்களின் இணையப்பக்கம் மத்திய அரசால் முடக்கப்பட்டு இருக்க வேண்டும். நாங்கள் சட்டப்போராட்டத்தில் களமிறங்குவோம். கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே விகடன் செயல்படுகிறது என மத்திய அரசுக்கு எதிரான புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விகடன் எக்ஸ் பக்கத்தில், "நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. 

ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நாங்க ரிப்போர்ட் கொடுக்கட்டுமா? முதல்வர் ஸ்டாலின் மீது இயக்குனர் பா. ரஞ்சித் காட்டம்.!