நாங்க ரிப்போர்ட் கொடுக்கட்டுமா? முதல்வர் ஸ்டாலின் மீது இயக்குனர் பா. ரஞ்சித் காட்டம்.!



Director Pa Ranjith Reply on CM Tweet 


புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் பட்டியலின இளைஞர் ஒருவர், புல்லட் ஒட்டிய காரணத்தால், சாதிய ரீதியான தாக்குதலை எதிர்கொண்டார். தற்போது அவரின் கைகள் வெட்டப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தமிழ்நாடு வளர்ச்சியடைந்து, தொடர்ந்து முன்னேறி வரும் மாநிலமாக இருந்தபோதிலும், அங்கங்கே சில சாதிய தாக்குதல்கள் தொடருகின்றன. இந்நிலையில், முதல்வர் முக ஸ்டாலினை அப்பா என பாராட்டி போஸ்டர் ஒன்றும் பதிவு செய்யப்பட்டு வைரலாகியது.

இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்; பேருந்து - வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலி.!

இந்நிலையில், சாதிய தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் முதல்வருக்கு, சாதிய தாக்குதல் குறித்த விபரத்தை நாங்கள் பட்டியல் போட்டு தர வேண்டுமா? என கேள்வி எழுப்பி இயக்குனர் பா. ரஞ்சித் காட்டமான பதிலை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இதுதொடர்பான ட்விட் பதிவில், தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? மான்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களே!! தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: இவ்வுளவு வன்ம வாதிகளாடா நீங்க? சாதி வெறியில் இளைஞர் மீது கொடூர தாக்குதல்.!