வெளில போடா நாயே.. திமுக பிரமுகரின் முகத்தில் காரி உமிழ்ந்த நிர்வாகி.. சாதி ரீதியாக இழிவுபடுத்தி அநீதி செயல்.! 



Nagapattinam Vedaranyam DMK Supporter Video 

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர், திமுக-வில் ஆதிதிராவிடர் அணியில் மாவட்ட தலைவராக இருக்கிறார். 

இதனிடையே, அவர் ஆதிதிராவிட மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவேண்டி ஒன்றிய செயலாளர் உதய முருகையனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். 

இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 55 வயது நபரின் அதிர்ச்சி செயல்.! 

அப்போது, அவர் சமுதாய ரீதியாக அவதூறு பேசி, முகத்தில் காரி உமிழ்ந்து அனுப்பி வைத்துள்ளார். மேலும், இதுதொடர்பாக திமுக மாவட்ட செயலாளர் கௌதமனிடம் கோரிக்கை வைத்தும் உரிய பதில் இல்லை. 

கீழ்நிலை நிர்வாகம் தான் நமக்கு ஆதரவாக இல்லை, மேல்நிலைக்கு அனுப்பி வைத்தபோதும் என தலைமை வரை புகார் அனுப்பியும் பலன் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியிட்டு அவர் கோரிக்கை வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

சரி என சென்னை தி.மு.க அலுவலகத்தில் புகார் கொடுத்தால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

மேற்படி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விடீயோவின் உண்மைத்தன்மை குறித்தும் விசாரிக்கப்படுகிறது. 
 

இதையும் படிங்க: நாங்க ரிப்போர்ட் கொடுக்கட்டுமா? முதல்வர் ஸ்டாலின் மீது இயக்குனர் பா. ரஞ்சித் காட்டம்.!