மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இராஜபாளையம்: சீருடையில் இருந்த காவலர்கள் மீது லத்தியால் சரமாரி தாக்குதல்.. போதையில் கும்பல் வெறிச்செயல்..!
போதையில் நடந்த அடிதடி குறித்து விசாரிக்கச் சென்ற காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில், காவல் சீருடையில் இருந்த காவலர்களை, மதுபோதை கும்பல் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. டாஸ்மாக் மதுபானக்கடை அருகே மதுபானம் அருந்திய கும்பல் இடையே ஏற்பட்ட அடிதடியை விசாரிக்கச் சென்ற போது, இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: கடவுளாக மாறிய தனியார் பேருந்து ஓட்டுநர்., நூலிழையில் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி.. பகீர் காட்சிகள்.!
காவல்துறையினர் விசாரணை
ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் உள்ள வெல்கம் பார் பகுதியில் இசக்கி என்பவர் மதுபானம் அருந்தி இருக்கிறார். அப்போது, 6 பேர் கும்பல் அவரை தாக்கிய நிலையில், இரத்த வெள்ளத்துடன் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்றவர் புகார் அளித்துள்ளார்.
இருவரின் மீதும் தாக்குதல்
இதன்பேரில் காவலர்கள் நிகழ்விடத்திற்குச் சென்று விசாரணை நடத்திய நிலையில், அதிகாரிகள் கும்பலை விசாரணை அழைத்தபோது காவலர்கள் இருவரை அவர்கள் கொண்டு வந்த லத்தியால் கும்பல் கொடூரமாக தாக்கியது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட காவலர்கள் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்டட்டனர்.
மேலும், தாக்குதல் நடத்திய ஆவரம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, கிரிராஜான், பாஞ்சாலி ராஜன், பாண்டியராஜன் உட்பட 9 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அதில் 7 பேரை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர். காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அதிர்ச்சி வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
#attackonpolice விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மதுபான பார் அருகே போலீசார் மீது தாக்குதல் நடத்திய 7 பேர் கைது - இருவர் தலைமறைவு @tnpoliceoffl pic.twitter.com/rYlzgr498S
— Mahalingam Ponnusamy (@mahajournalist) November 16, 2024
இதையும் படிங்க: மகாபலிபுரத்தில் பணியாளர் தாக்கப்பட்ட விவகாரம்; 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது.!