5 வயது குழந்தையின் உயிருக்கு எமனான மின்கம்பம்; இருகன்குடியில் நடந்த சோகம்.. ஊழியர்களின் அலட்சியத்தால் பரிதாபம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், இருக்கன்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணி கார்த்திக். இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அன்னதான கூடத்தில், இவர் சமையலராக வேலை பார்த்து வருகிறார். மணி கார்த்திக்கின் மனைவி நந்தினி. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
மின்சாரம் தாக்கி பலி
இருவருக்கும் தற்போது ஐந்து வயதுடைய சம்யுகதா என்ற குழந்தை இருக்கிறார். இன்று காலை நேரத்தில் குழ்ந்தை சம்யுக்தா, வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கிருந்த மின்சார கம்பத்தை பிடித்தவாறு விளையாடியதாக தெரியவருகிறது. அச்சமயம், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருக்கிறது.
மரணம் உறுதி
இதனால் தூக்கி வீசப்பட்ட குழந்தை, நிகழ்விடத்தில் உயிருக்கு துடிதுடித்து பலியாகி இருக்கிறது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து குழந்தையை மீட்டு, பெற்றோருக்கு தகவல் தெரிவித்தவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு குழந்தையின் மரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதையும் படிங்க: #Breaking: பெண் ஒருவருடன் தனிமையில் முன்னாள் அமைச்சர்? இணையத்தில் லீக்கான போட்டோ.. பரபரப்புக்கும் அரசியல்களம்..!
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம்?
இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவல் அறிந்து வந்த இருக்கன்குடி காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமி உயிரிழந்த மின்கம்பத்தில் மின்சாரம் கசிவதாக பலமுறை மின்வாரிய ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பேசி மயக்கிய கூலி தொழிலாளி... கர்ப்பமான 17 வயது சிறுமி.!! மீண்டும் ஒரு போக்சோ வழக்கு.!!