போதையால் சீரழிந்த குடும்பம்... கணவனை போட்டுதள்ளிய மனைவி.!!! போலீஸ் விசாரணை.!!



woman-brutally-murdered-alcoholic-husband-police-enquir

கரூரில் மது போதையில் தகராறு செய்த கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இறந்த நபரின் மனைவியை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகனை இழந்த தம்பதி

கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இவர்களது மகன் கடந்த வருடம் நோயால் உயிரிழந்தார். இதன் பிறகு கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. மேலும் சந்திரசேகரும் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்.

tamilnadu

கட்டையால் அடித்து கணவன் கொலை

இந்நிலையில் நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்த சந்திரசேகர் தனது மனைவியுடன் தகராறு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சரண்யா வீட்டிலிருந்த கட்டையை எடுத்து சந்திரசேகரை பலமாக தலையில் அடித்துள்ளார். இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: 13 வயது சிறுமி கட்டாய திருமணம்... பாலியல் தொல்லை.!! 47 வயது நபர் மீது போக்சோ வழக்கு.!!

மனைவி கைது

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கட்டையால் கணவனை அடித்து கொலை செய்த சரண்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கணவனை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: இளம் பெண்ணிற்கு ஆபாச மெசேஜ்... தட்டி கேட்ட கணவன் வெட்டி படுகொலை.!! இளைஞர்கள் வெறி செயல்.!!