திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குடிகார கணவன்... கள்ளக்காதலுடன் சேர்ந்து எமலோகம் அனுப்பிய மனைவி.!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிற்கு அடிமையான கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து இளம்பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் இருவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுவிற்கு அடிமையான கணவன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் தனவேல்(40). இவருக்கு திருமணமாகி அருள்மொழி(33) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான தனவேல் தினமும் குடித்துவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். மேலும் அவர் குடித்து விட்டு வந்து வீட்டில் படுத்துக் கொள்வார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
ஆட்டோ டிரைவருடன் கள்ளக்காதல்
இந்நிலையில் தனவேலின் மனைவி அருள்மொழிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சரவணன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவனை, கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார் அருள்மொழி.
இதையும் படிங்க: கொலையில் முடிந்த தகராறு... வெட்டி சாயக்கப்பட்ட கட்டிட தொழிலாளி.!! தந்தை, மகன்கள் கைது.!!
தலையணையால் அழுத்தி கொடூர கொலை
இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த தனவேல், மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அருள்மொழி தனது கள்ளக்காதலன் சரவணணை இரவில் வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தனவேலின் கால்களை சரவணன் பிடித்துக் கொள்ள அவரது முகத்தில் தலையணையால் அழுத்தி மூச்சுத் திணற வைத்து கொலை செய்து இருக்கிறார் அருள்மொழி. இதனைத் தொடர்ந்து எதுவும் தெரியாதது போல் அமைதியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் இறந்த தனவேலின் தம்பி கருப்பன் அளித்த புகாரின் பேரில் காவல்துறை நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனவேலின் மனைவி அருள்மொழி மற்றும் அவரது காதலன் சரவணன் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.
இதையும் படிங்க: சேலம்: 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை.!! விசாரணையில் வெளியான உண்மை.!!