பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் நெருங்கி பழகியதால் இளம்பெண் கர்ப்பமானார்!. திருமணம் தடைபெற்றதால் நேர்ந்த துயரம்!.
சென்னை போரூரில் கடந்த மாதம் பச்சிளம் குழந்தையை துணிப்பையில் வைத்து சுடுகாட்டிற்கு அருகில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இளம் பெண் குழந்தை ஒன்று துணிப்பையில் கிடந்ததைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பச்சிளம் குழந்தையை மீட்டு போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அந்தக் குழந்தை, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குழந்தையை வீசிச் சென்ற நபர்கள் யாரென்று, காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தபோது இளம் பெண் ஒருவர் குழந்தையை துணிப்பையில் வைத்து வீசிசென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் டெய்சி லாவண்யா என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகியதில் நான் கர்ப்பமடைந்தேன்.
இந்நிலையில், என்னுடைய தாயும் உடல்நலக்குறைவால் இறந்து விட, நிச்சயிக்கப்பட்ட நபரும் கைவிட்டுச் சென்றார், இதனால் பெற்ற குழந்தையை வளர்க்க முடியாமல், வீசி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.