இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
உங்கள் ஸ்மார்ட் போன் நீண்ட நாட்கள் உழைக்கணுமா.? இதை பண்ணுங்க போதும்.!?
தற்போதுள்ள நவீன காலகட்டத்திற்கு ஏற்ப பல நவீன பொருட்களும் வந்து விட்டன. இதில் குறிப்பாக ஸ்மார்ட் போன் என்பது பலரது வாழ்க்கையிலும் அத்யாவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. ஸ்மார்ட்போன் இல்லாத நபரை இல்லை என்று சொல்லலாம். இந்த ஸ்மார்ட்போனை அதிக விலை கொடுத்து வாங்கினாலும் ஒரு சில வருடங்கள் மட்டுமே உபயோகிக்க முடிகிறது என்று பலரும் யோசித்து இருப்போம். இதன்படி ஸ்மார்ட் போன் நீடித்த நாட்கள் உழைப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை குறித்து பதிவில் காணலாம்?
ஸ்மார்ட்போன் நீண்ட நாட்கள் உழைக்க செய்ய வேண்டியவை
1. முதலில் ஸ்மார்ட் போன் வாங்கியவுடன் உபயோகப்படுத்தாமல் முழுவதுமாக சார்ஜ் போட வேண்டும்.
2. ஸ்மார்ட் போனிற்கு தரமான பேக் கேஸ் மற்றும் ஸ்கிரீன் கார்டு பொருத்துவது நல்லது.
3. ஸ்மார்ட்போனை அடிக்கடி மென்மையான துணி கொண்டு துடைக்க வேண்டும்.
4. நேரடியாக சூரியஒளி படும் இடத்தில் ஸ்மார்ட்போனை வைக்கக்கூடாது.
5. போனை அடுத்ததாக உபயோகிக்கும் போது 100% முழுவதுமாக சார்ஜ் செய்யக்கூடாது. இது பேட்டரியை பலவீனப்படுத்தும்.
6. ஸ்மார்ட் போன் தவறி தண்ணீரில் விழுந்து விட்டால் உடனடியாக சார்ஜ் செய்யக்கூடாது.
7. ஸ்மார்ட் போன் பாகங்களை உடனடியாக கழட்டி தனித்தனியாக வைத்து விட வேண்டும்.
8. அடிக்கடி சார்ஜர்களை மாற்றக்கூடாது. போன் வாங்கியதிலிருந்து ஒரே சார்ஜர் உபயோகப்படுத்துவது நல்லது. இது போன்ற செயல் முறைகளின் மூலம் ஸ்மார்ட் போனை நீண்ட காலத்திற்கு உழைக்கும்.
இதையும் படிங்க: செல்போன் நோண்டும் போது தொந்தரவு.. சகோதரனை போட்டு தள்ளிய 14 வயது சிறுமி.!
இதையும் படிங்க: மக்களே உஷார்.. செல்போன் பேட்டரி அடிக்கடி சூடாகுதா?.. இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க..!!