மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களே உஷார்.. செல்போன் பேட்டரி அடிக்கடி சூடாகுதா?.. இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க..!!
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நமக்கு கிடைத்த பரிசாக கருதப்படும் ஸ்மார்ட் ஃபோனை நாம் தினமும் உபயோகம் செய்து வருகிறோம். ஸ்மார்ட் போனை நாம் தொடர்ந்து உபயோகம் செய்து வந்தால் அது சூடாகும் வாய்ப்பு அதிகம்.
அதேபோல வெப்பநிலை நிறைந்த இடங்களில் ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் அது பேட்டரியை சேதப்படுத்தும். சில நேரங்களில் வெடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் போனில் பிரைட்னஸ் அதிகமாக இருந்தால் அது பேட்டரியை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
அதனால் பிரைட்னஸை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். போனில் பிரைட்னஸ் அதிகமாக இருப்பது, ஆப்களை அப்டேட் செய்யாதது, சூரிய ஒளியில் வைத்திருப்பது, ஆண்ட்ராய்டு மொபைலில் வைரஸ் அல்லது பிற ஆப்களை இன்ஸ்டால் செய்யும்போது விரைவில் வெப்பம் உண்டாகும்.
கேம் அல்லது வீடியோ பார்க்கும்போதும் அளவுக்கு அதிகமான நேரத்திலும் தொடர்ந்து உபயோகம் செய்வதால் விரைவில் வெப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆண்ட்ராய்டு மொபைல்களை உபயோகிக்கும்போது தெரியாத ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும்.