மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போன் நோண்டும் போது தொந்தரவு.. சகோதரனை போட்டு தள்ளிய 14 வயது சிறுமி.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்லிதிகல கிராமத்தில் வசிக்கும் ஒரு 14 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். சம்பவ தினத்தில் அந்த சிறுமியின் குடும்பத்தினர் வேலைக்காக வெளியில் சென்று இருந்தனர். அப்போது, 18 வயது சகோதரரும் சிறுமியும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
சிறுமி தனது ஆண் நண்பர்களுடன் நீண்ட நேரம் செல்போனில் சேட் செய்துள்ளார். இதை பார்த்த அந்த சகோதரன் சிறுமியை கண்டித்து இருக்கிறார். இதில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமி மிகுந்த கோபத்தில் பழிவாங்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.
அந்த 18 வயது சகோதரன் உறங்கிக் கொண்டிருந்தபோது இதுதான் சமயம் என்று நினைத்த அந்த சிறுமி வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து அவரை சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் மூழ்கிய சகோதரன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.
பின்னர் தன் உடையில் இருந்த ரத்த கரையை சுத்தம் செய்து விட்டு சற்று நேரத்தில் கட்டி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை வரவழைத்து தன் அண்ணனை யாரோ கொலை செய்து விட்டனர் என்று தெரிவித்து இருக்கிறார். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
சிறுமியிடம் போலீசார் மேற்கொண்ட கிடுக்கு பிடி விசாரணையில் தானே தன் அண்ணனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து, சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். செல்போனில் சேட் செய்ய இடைஞ்சலாக இருந்த அண்ணனை தங்கையே கொலை செய்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.