Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
லாட்டரியில் பணம் வென்றதாக வலை.. நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் பணத்தை இழந்து தற்கொலை.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சஹாங்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் இளம்பெண் ராணி (வயது 26). இவருக்கு நிச்சயம் சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது. விரைவில் திருமணமும் நடக்கவுள்ளது.
இதனிடையே, சில நாட்களுக்கு முன்னதாக ராணி ஆன்லைன் லாட்டரியில் ரூ.42 இலட்சம் பரிசு வென்றுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும், பரிசை பெற ரூ.1.50 இலட்சம் முன்பணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: தமிழக மக்களே உஷார்.. வாட்ஸப்பில் இந்த மாதிரி மெசேஜ் வருதா? மோசடி எச்சரிக்கை..! நம்பிடாதீங்க.!
மோசடி அரங்கேறிய விதம்
இதனை நம்பிய ராணி, தனது வங்கிக்கணக்கில் சிறுகச்சிறுக சேமித்து வைத்தது, உறவினர்களிடம் கடன் வாங்கியது என ரூ.1.50 இலட்சம் பணத்தை செலுத்தி இருக்கிறார். அப்போது, அவருக்கு ரூ.42 ஆயிரம் பணம் செலுத்தப்பட்டதாக ரசீதும் அனுப்பி வைக்கப்பட்டது.
லாட்டரி தொகை வந்துவிடும் என எதிர்பார்த்து காத்திருந்த பெண்ணுக்கு, பணம் வராதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் பணத்தை இழந்த ஏமாற்றத்தில் ராணி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டன் போன் பயன்படுத்துறீங்களா? வந்தது விடியல்.. டிராய் அறிவிப்பு.. அதிரடி தகவல் இதோ.!