பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
பட்டன் போன் பயன்படுத்துறீங்களா? வந்தது விடியல்.. டிராய் அறிவிப்பு.. அதிரடி தகவல் இதோ.!
இந்திய தொலைத்தொடர்பு சேவைகள் ஒழுங்குமுறை ஆணையமான டிராய், டெலிகாம் நிறுவனங்களின் கட்டண விதிமுறைகளில் புதிய திருத்தத்தை கொண்டு வருகிறது. அதன்படி, இணைய சேவையினை பயன்படுத்தாத வாடிக்கையாளர், வாய் கால் டாக் டைம், எஸ்எம்எஸ் சேவைக்கு தனியே ரீஜார்ஜ் பிளான் பெரும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதிக தொகை வசூல்
இந்த நடைமுறையை டிராய் செல்போன் நிறுவனங்கள் செயல்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. ஏனெனில், சமீபகாலமாகவே தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவரும் நிறுவனங்கள், தங்களின் வாடிக்கையாளருக்கு தேவையில்லாத சேவையை, தங்களின் ரீஜார்ஜ் பேக்குடன் இணைத்து அதிக தொகை வசூலித்து வருகிறது.
இதையும் படிங்க: ஸ்மார்ட் டிவி வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!
சேவை திணிப்பு
பட்டன் ரக செல்போன் வைத்துள்ள வாடிக்கையாளரிடம் இருந்தும் இணைய சேவைக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டாக்-டைம் பிளான்கள் பல நீக்கப்பட்டுள்ளன அல்லது புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன. அழைப்பு, குறுஞ்செய்தி சேவை மட்டும் கொடுக்க வேண்டிய இடத்தில், பயன்படாத கூடுதல் சேவை திணிக்கப்படுகிறது.
சிறப்பு பிளான்
குறிப்பாக தொலைதூர பகுதிகள், கிராமங், 2 ஜி நெட்ஒர்க் அமைப்பு கொண்ட இடத்தில் என இன்றளவும் 15 கோடி பட்டன் மொபைல் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அழைப்பு, எஸ்.எம்.எஸ் ஆகியவற்றுக்கு சிறப்பு பிளான் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உங்களின் மரணம் எப்போது? ஈசியாக கண்டுபிடிக்க வந்தது ஏஐ ஆப்..!