தமிழக மக்களே உஷார்.. வாட்ஸப்பில் இந்த மாதிரி மெசேஜ் வருதா? மோசடி எச்சரிக்கை..! நம்பிடாதீங்க.!



WhatsApp Scam Focusing Tamilnadu Audience With TN Govt Logo 

 

அரசின் புகைப்படத்துடன் அரசு பயன்படுத்தும் செயலி போல மெசேஜ் வந்தால், நீங்கள் இரண்டு ஆண்டுக்கு முன்பு பதிவு செய்த விபரம் குறித்த தகவல் வந்தாலும், அதனை நம்ப வேண்டாம். அதில் உள்ள இணைப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் வருகை அதிகரித்ததில் இருந்து, மக்களின் அறியாமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஏமாற்றும் மோசடி செயல்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. 

இதையும் படிங்க: பட்டன் போன் பயன்படுத்துறீங்களா? வந்தது விடியல்.. டிராய் அறிவிப்பு.. அதிரடி தகவல் இதோ.!

இவ்வாறான குற்றத்தில் ஈடுபடும் நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும், மோசடி நபர்களின் அபரீத வளர்ச்சி தொடர்ந்து இவ்வாறான செயலை பல்வேறு பெயர்களில் முன்னெடுக்க காரணமாக அமைகிறது. 

இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசின் புகைப்படத்தை பயன்படுத்தி, அரசு வாகனம் தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்புவதை போல மோசடி செயல்கள் அரங்கேற்றப்படுகிறது.

இதனால் மக்கள் கவனமுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. தெரியாத அலைபேசி எண்ணில் இருந்து வரும் மெசேஜ்களை திறக்க வேண்டாம். அல்லது அதில் குறிப்பிடும் வகையில் இருக்கும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என சைபர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 

இதையும் படிங்க: ஸ்மார்ட் டிவி வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!