ஸ்மார்ட் டிவி வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!



  Smart TV Buying tips 

சந்தைகளில் இன்றளவில் ஏராளமான ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இன்டர்நெட், டிஷ் வாயிலாக செயல்படும் தன்மை கொண்டவை ஆகும். ஆகையால், பலதரப்பட்ட செயலிகளை சந்தா செலுத்தியும், டிவிக்கு தனியாக கட்டணம் செலுத்தியும் நாம் அதனை பயன்படுத்தலாம். 

நாம் இவ்வாறான ஸ்மார்ட் டிவி வாங்கும்போது அதன் தனிப்பட்ட அனுபவம், நமது தேவை, டிவி செயல்படும் திறன் உட்பட பல்வேறு விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும். முன்பு கலர் இல்லாத தொலைக்காட்சியில் தொடங்கிய புரட்சி, இன்று வீட்டிற்கே திரையரங்கை கொண்டு வரும் அனுபவத்தையும் வழங்குகிறது. 

வேகத்தை குறைக்கும்

அந்த வகையில் ஸ்மார்ட் டிவி தேர்வு செய்யப்படும்போது, அதன் செயல்படும் திறன் விஷயத்தை முக்கியமாக கவனிக்க வேண்டும். ஒருசில ஸ்மார்ட் டிவிக்கள் விலை மலிவு போல தோன்றினாலும், அதன் செயல்பாடுகள் அமைப்புகளை தேர்வு செய்யும்போது, இன்டர்நெட் கனெக்ட் செய்யும் போது வேகத்தை குறைக்கும்.

இதையும் படிங்க: உங்களின் மரணம் எப்போது? ஈசியாக கண்டுபிடிக்க வந்தது ஏஐ ஆப்..!

Technology

இவ்வாறான ஸ்மார்ட் டிவி நமது பொறுமையை சோதிக்கும். இன்றளவில் 4 கே, அல்ட்ரா எச்டி என பல வசதிகள் வந்துவிட்டன. ஸ்மார்ட் டிவியை நாம் வாங்கும் முன்பு அதன் செலவு, அளவு, உறுதித்தன்மை, எச்டி தரம், ரீபிரஸ் ரேட், ஆப்ஷன்ஸ், பெனிபிட் ஆகிய விஷயங்களை கவனிக்க வேண்டும்.  

அதிகாரபூர்வ விற்பனை மையத்திற்கு செல்லுங்கள்

பட்ஜெட்க்கு ஏற்ப ஸ்மார்ட் டிவிக்கள் இன்று தரமாக வருகின்றன. உங்களின் முதலீடுகளை பொறுத்து அதனை தேர்வு செய்துகொள்ள வேண்டும். முடிந்தளவு இரண்டாம்கட்ட டீலர்ஷிப் கடைக்கு செல்லாமல், நேரடியாக அதன் விற்பனை மையத்தை அணுகி டிவி வாங்குவது நல்லது. இது உங்களின் செலவையும் குறைத்து, நல்ல டிவியை தேர்வு செய்ய வழிவகை செய்யும். 

இன்றளவில் 24 இன்ச் முதல் 55 இன்ச் வரை உள்ள ஸ்மார்ட் டிவிக்கள் பரவலாக விரும்பப்படுகிறது. 32 இன்ச் டிவியும் வாங்கப்படுகிறது. நாம் டிவியை உபயோகம் செய்யும்போது, அதன் இயக்கம் ஆண்ட்ராய்டு போன்களை போல எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். அவ்வாறான இயக்கம் கொண்ட டிவியை தேர்வு செய்து வாங்கலாம். 

Technology

புதுப்பிப்பு திறன் முக்கியம்

சிறந்த திரை அனுபவத்தை பெற 4 கே மதிப்பு வழங்கும் டிவியை தேர்வு செய்யலாம். சாதாரணமாக பார்க்க 720 முதல் 1080p அளவுள்ள திறன் கொண்ட டிவியை தேர்வு செய்யலாம். பெரும்பாலான டிவிக்களில் இன்று டால்பி ஒலி அமைப்பும் வருகிறது. அதிக இசை கேட்க நினைப்பவர்கள், கூடுதல் ஸ்பீக்கரையும் பொருத்தி கொள்ளலாம்.

முடிந்தளவு 60 Hz முதல் 120 Hz வரையிலான வேகம் கொண்ட புதுப்பிப்பு திறன் (Refresh Rate) டிவியை தேர்வு செய்வது நல்லது. டிவியுடன் நமது ஸ்மார்ட்போனை இணைக்கும்போது, அவை சிறந்து இயங்கும் அமைப்பு இருந்தால் நல்லது. அது சார்ந்த டிவியை தேர்வு செய்ய வேண்டும். ஸ்மார்ட் டிவியை தேர்வு செய்யும் நடுத்தர மக்கள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை உள்ள டிவிக்கள் தேர்வு செய்வது நல்லது.

இதையும் படிங்க: கடந்த மாதங்களை விட ஸ்பேம் அழைப்புகள் தேசிய அளவில் குறைவு; டிராய் அறிவிப்பு..