பஸ்ஸுக்கு காத்திருந்த தமிழக பெண், கூட்டு பாலியல் பலாத்காரம்.! பெங்களூரில் அதிர்ச்சி.!



tn krishnagiri women raped by 2 in bengaluru

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண் பாலியல் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு தனது நகைகளை பறிகொடுத்த சம்பவம் பெங்களூரில் அரங்கேறியுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை

தமிழகம் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த ஒரு 37 வயது பெண் கடந்த ஜனவரி 19ஆம் தேதி டவுன்ஹால் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்பொழுது அங்கே சரவணன் மற்றும் கணேஷ் என்ற 2 கொடூரன்கள் வந்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: மணமேடையில்.. தாய் செய்த காரியம்.. பதறிப்போன மணமகன்.. இறுதியில் உறுதியான முடிவு.!

Krishnagiri

கொள்ளை

மேலும், அந்த பெண் தனது பைகளில் வைத்திருந்த பணம் மற்றும் அவர் அணிந்திருந்த நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது பற்றி அந்தப் பெண் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கணேஷ் மற்றும் சரவணன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

பாதுகாப்பின்மைக்கு என்ன தான் தீர்வு?

பேருந்து நிலையத்தில் அத்தனை பேர் நடமாடும் இடத்தில் கூட ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லாமல் இப்படிப்பட்ட மோசமான சூழல் இருக்கிறது. இதற்கெல்லாம் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் வரை இந்த குற்றங்கள் குறையாது. அன்றாடம் இதுபோல நூறுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறி வருகின்றன. இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?

இதையும் படிங்க: ஆன்லைன் காதல்.. நேரில் வந்த காதலி.. நிகழ்ந்த சம்பவத்தில்.. இறந்த காதலன்.!