அலட்சியமான செயல்.! நொடிப் பொழுதில் விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர்.! வைரலாகும் ஷாக் வீடியோ!!
இந்தோனேசியா ஜகாத்தா சர்வதேச விமான நிலையத்தில் படிக்கட்டு நகர்த்தபட்ட நிலையில் ஊழியர் நொடிப்பொழுதில் கீழே விழுந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
விமானத்திற்குள் ஊழியர் ஆய்வு
இந்தோனேசிய ஜகாத்தா சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிரான்ஸ்நுசா ஏர்பஸ் ஏ320 விமானத்தில் விமான நிறுவன ஊழியர் உள்ளே சென்று ஆய்வு செய்துள்ளார். பின்னர் ஆய்வை முடித்துவிட்டு அவர் விமானத்திலிருந்து இறங்க முயன்றுள்ளார். ஆனால் அதற்கிடையே விமான ஊழியர் உள்ளே இருப்பதை கவனிக்காத பிற ஊழியர்கள் விமானத்திலிருந்து இறங்குவதற்கு வைத்திருந்த படிக்கட்டினை நகர்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்; உயிர்கொடுத்த மருத்துவர்கள்.!
நகர்த்தப்பட்ட படிக்கட்டுகள்
இந்நிலையில் படிக்கட்டினை நகர்த்தியதை பார்க்காமல் விமான ஊழியர் விமானத்திலிருந்து இறங்க முற்பட்டபோது நொடிபொழுதில் கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த விமான ஊழியர் புனே லோஹேகான் பகுதியைச் சேர்ந்த விவின் அந்தோணி டொமினிக் என கூறப்படுகிறது.
கீழே விழுந்த ஊழியர்
இந்த நிலையில் விமான ஊழியர் கீழே விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட பலரும் விமானத்தின் கதவு மூடுவதற்கு முன்பு ஏன் படிகட்டினை நகர்த்தினர், அலட்சியமான செயல் என கூறி வருகின்றனர்.
Shocking video received on WhatsApp -
— Sanjay Lazar (@sjlazars) May 15, 2024
Warning ⚠️ ⛔️ alarming visuals of a staffer falling of a plane #aviation #avgeek #plane #shocking
Incident occurred in Indonesia with Transnusa airlines & Jas Airport services @webflite @aviationbrk @AviationWeek @airlinerslive @airlivenet… pic.twitter.com/PtP3K8ZXdj
இதையும் படிங்க: இறந்த மனைவியின் உடலை 4 நாள் பிணவறையில் வைத்த கணவன்.. கண்ணீர் தரும் காரணம்.!