மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உயிருக்கு கெடுவைத்த மருத்துவர்கள்.! சுயமாக மருந்து கண்டுபிடித்து மூளை புற்றுநோயில் இருந்து மீண்ட மருத்துவர்.?!
மூளை புற்றுநோயிலிருந்து மீண்ட ஆஸ்திரேலியா மருத்துவர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவர் ரிச்சர்டு ஸ்கோலியர். இவருக்கு 57 வயது ஆகி வரும் நிலையில் போலந்து நாட்டில் வசித்து வருகிறார். இதனை அடுத்து இவருக்கு 4ஆம் நிலை கேன்சர் மூளையில் இருப்பது தெரியவந்துள்ளது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள் 12 மாதங்கள் மட்டுமே இவர் உயிர் வாழ முடியும் என்று கூறியுள்ளனர். ஆனால் இவரது சொந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் மூளையில் உள்ள கேன்சர் முற்றிலுமாக குணமடைந்து கேன்சரில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
மூளை புற்றுநோய்க்கான நோய் எதிர்ப்பு சிகிச்சை
இதுகுறித்து ரிச்சர்ட் ஸ்கோலியர் கூறியதாவது, இவரும் இவரது நண்பரும் சக ஊழியருமான ஜார்ஜினா லாங்குடன் என்பவருடன் சேர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், மெலோனின் என்ற தோல் புற்று நோயை குறித்த படிக்கும்போது அதற்காக உருவாக்கப்பட்ட சிகிச்சை ஆராய்ச்சியை தனக்குத்தானே செய்து பரிசோதனை செய்துள்ளார். இந்த பரிசோதனைக்கு பிறகு எடுக்கப்பட்ட எம் ஆர் ஐ ஸ்கேனில் மூளையில் புற்றுநோய்க்கான கட்டிகளே இல்லை என்று தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அலட்சியமான செயல்.! நொடிப் பொழுதில் விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர்.! வைரலாகும் ஷாக் வீடியோ!!
இவர்களின் இந்த பரிசோதனை கண்டுபிடிப்புக்காக புகழ்பெற்ற ஆஸ்திரேலியன் விருது இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மூளையில் உள்ள புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் குணமுடையது என்பதால் நோய் எதிர்ப்பு சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். மேலும் மூளையில் உள்ள கேன்சர் கட்டியை அகற்றும்போது அதனுடன் கொடுக்கும் மருந்துகளும் நோய் எதிர்ப்பு சக்தி சிகிச்சையும் சேர்ந்து புற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்துகிறது என்று கூறியுள்ளார் . இந்த சிகிச்சை பெற்று குணமடைந்த முதல் மூளை புற்றுநோய் சிகிச்சையாளராக ரிச்சர்ட் ஸ்கோலியர் இருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது.
புற்றுநோய் குணமடைந்த மருத்துவரின் பேட்டி
மேலும் இதுகுறித்து அவர் பேசும்போது இந்த சிகிச்சையின் போது வலிப்பு, கல்லீரல் பிரச்சனை, நிமோனியா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது. புற்றுநோய் கட்டிகள் முற்றிலுமாக குணமடைந்து விட்டது என்றால் தெரியவில்லை. ஆனால் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க எனக்கு இன்னும் சிறிது நாட்கள் கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியாக பேட்டி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: இறந்த மனைவியின் உடலை 4 நாள் பிணவறையில் வைத்த கணவன்.. கண்ணீர் தரும் காரணம்.!