மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டிராஃபிக் போலீசாக மாறிய அதிசய நாய்..! விதிகளை மீறினால் ஓடிச்சென்று குறைக்கும் அதிசயம்..!
உலகின் எந்த ஒரு இடத்தில் நடைபெறும் வித்தியாசமான நிகழ்வுகள் இணையம் மூலம் உலகம் முழுவதும் வைரலாகிவிடுகிறது. இந்நிலையில் சாலை விதிகளை கடைபிடித்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நாய் ஒன்றின் செயல் வீடியோவாக பதிவாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தென்மேற்கு ஜார்ஜியாவில் உள்ள பத்தூமி என்ற நகரில், நாய் ஓன்று ட்ராபிக் போலீசாக மாறியுள்ளது. சாலையில் ட்ராபிக் சிக்னல் போட்டதும், விதியை மீறும் வாகனங்களை விரட்டி சென்று குறைகின்றது. மேலும், பொதுமக்கள் சாலையை கடக்க இந்த நாய் உதவி செய்கிறது.
அதிலும், குழந்தைகள் என்றால் அவர்கள் சாலையை கடக்கும்வரை அவர்கள் கூடவே சென்று மறுபுறம் வரை சென்று அவர்களை பத்திரமாக விட்டு வருகின்றது. கிட்டத்தட்ட டிராஃபிக் போலீசாகவே உருமாறிய இந்த குட்டி நாயின் வீடியோ இணையத்தில் செம வைரலாகிவருகிறது.