திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
50 முறை பலவந்தப்படுத்தி பலாத்காரம்.. வயதுக்குவந்து 18 வயதுக்குள் ஆசிரமத்தில் நடந்த கொடுமை.!
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து இந்தியா வருவோரில், ஒருசிலர் ஆன்மீக ரீதியான பயணங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பெண்கள், சிறுமிகள் போன்றோர் இந்தியாவில் இருக்கும் ஆசிரமத்திற்கு வருகை தரும்போது, அவர்கள் நேரடியாக / மறைமுகமாக பாலியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்கதையாகியுள்ளது
18 வயதுக்குள் நடந்த கொடுமை
இதனிடையே, இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த பிரேம் சர்கம் என்ற 57 வயது பெண்மணி, தனது 18 வயதில் நடந்த துயரத்தை அதிர்ச்சிதரும் உண்மையாக தெரிவித்து இருக்கிறார். அதாவது, அவர் தனது தந்தையுடன் 6 வயதில் ஓஷோ ஆசிரமத்திற்கு வருகை தந்துள்ளார்.
50 முறை பாலியல் பலாத்காரம்
அவரின் இளமை காலத்தில் நாட்கள் சிறப்புடன் கழிந்தாலும், 18 வயதிற்குள் பெண்மணி 50 முறை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். புனேவில் இருக்கும் ஓஷோ ஆசிரமத்தில் சேர்ந்த பெண்மணி, வயதுக்கு வந்த பின்னர் ஆண்களுடன் பாலியல் ரீதியாக உறவாட வற்புறுத்தப்பட்டு இருக்கிறார். இந்த தகவல் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், பெண்ணின் குற்றச்சாட்டுக்கு ஓஷோ புனே ஆசிரம நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தன்னைத்தானே திருமணம், விவாகரத்து., தற்போது தற்கொலை.. 26 வயதில் முடிந்த கதை.!