மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
40 இராணுவ வீரர்கள் கொடூர கொலை; பயங்கரவாதிகளின் உயிர் நடுங்கவைக்கும் செயல்..! மத்திய ஆப்பிரிக்காவில் துயரம்.!
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சாத் நாட்டில், மதவாத அடிப்படை அரசை நிறுவ முயற்சிக்கும் போகோ ஹராம் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இவர்கள் அவ்வப்போது அங்குள்ள கிராமங்களில் இருக்கும் மக்களை கொடூரமாக கொன்று குவித்து வருகின்றனர்.
போகோ ஹராம் பயங்கரவாதிகளின் செயல்களை ஒடுக்க அந்நாட்டு இராணுவம் தீவிர முயற்சியில் ஈடுபடுகிறது எனினும், அவ்வப்போது அவர்களுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு மிகப்பெரிய அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ரீல்ஸ் வீடியோ மோகத்தால் சோகம்; சிறுவன் மீது மோதிய இரயில்.. பதறவைக்கும் வீடியோ.!
பயங்கரவாத தாக்குதல்
இந்நிலையில், நேற்று சாத் நாட்டில் உள்ள லேக் பகுதியில் செயல்ப்ட்டு வரும் இராணுவ மையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அங்கு நடைபெற்றுள்ள தாக்குதலை உறுதி செய்துள்ள சாத் நாட்டின் அதிபர் மஹாமத் இட்ரிஸ் டெபி, பயங்கரவாதிகளை வேட்டையாட உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: மணப்பெண்ணுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் பளார் விட்ட மணமகன்.. வாக்குவாதம் மோதலில் முடிந்தது.!