வெடிகுண்டை விளையாட்டுப்பொருளாக நினைத்ததால் சோகம்; 3 குழந்தைகள் பரிதாப பலி.!



in Pakistan Khyber Pakhtunkhwa Province 3 Children Died 

 

பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வீட்டிற்கு வரும் வழியில் குண்டு வெடித்து பலியான சோகம் நடந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள வடமேற்கு மாகாணம், கைபர் பக்துன்க்வா. இம்மாகாணத்தில் உள்ள ஜானி கேள் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று பள்ளிக்கு வந்த குழந்தைகளில், சகோதரர் உட்பட மூவர், ஒன்றாக வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். 

இதையும் படிங்க: மீண்டும் தீவிரவாதம்...பாகிஸ்தான் நாட்டில் கொடூர தாக்குதல்.!! பெண்கள், குழந்தைகள் உட்பட 38 பேர் பலி.!!

வெடித்து சிதறியது

அப்போது வழியில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த அபாயகரமான வெடிகுண்டை, தவறுதலாக குழந்தைகள் விளையாட்டுப்பொருள் என நிலைத்துள்ளது. அப்போது, குண்டு எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. 

குழந்தைகள் மூவர் பலி

இந்த சம்பவத்தில் இரண்டு சகோதர ர்கள் உட்பட மூன்று பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். குண்டு வெடிப்பு சத்தம் கேட்டு பதறிப்போன மக்கள், அங்கு சென்றபோது விபரீதம் புரிந்துள்ளது. பின் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உயிரிழந்த சிறார்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: பாம்பு கடித்த நபரை காப்பாற்றாமல் தீவிர பிரார்த்தனை; பரிதாபமாக உயிரிழந்த பெண்.!