மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் தீவிரவாதம்...பாகிஸ்தான் நாட்டில் கொடூர தாக்குதல்.!! பெண்கள், குழந்தைகள் உட்பட 38 பேர் பலி.!!
பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 38 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ராணுவம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைபர் பக்துன்கா துப்பாக்கிசூடு
பாகிஸ்தான் நாட்டின் பிராசினார் என்ற பகுதியிலிருந்து பெஷாவர் நகரை நோக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் வேன்களில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த வேன் குர்ரம் என்ற இடத்தை அடைந்த போது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
38 பேர் பலி
இந்த கொடூர தாக்குதலில் வேனில் பயணம் செய்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 38 பேர் பரிதாபமாக பலியாகி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவத்தினர் மற்றும் போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: புகைப்பழக்கம் கொண்டவரா நீங்கள்? உங்களின் நுரையீரல் இப்படித்தான் இருக்குமாம்.. உஷார்.!
தீவிர விசாரணை
நீண்ட நாட்களாக தீவிரவாத தாக்குதல் நடைபெறாமல் இருந்த பாகிஸ்தான் நாட்டில் தற்போது நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் மக்களை அச்சமடைய செய்திருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில் காவல்துறை மற்றும் ராணுவம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: ஆபாச படம் பார்க்க தொந்தரவு.. தாய், தந்தை உட்பட 5 பேர் கொலை.!! 15 வயது சிறுவன் வெறி செயல்.!!