ஒட்டுமொத்தமாக நோய்கிருமியை அழிக்க ஆல்கஹால் குளியல்.. 45 வயது பெண் பரிதாப பலி.!



in-taiwan-45-aged-woman-dies-on-2006

கடந்த 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை உலகளவில் சார்ஸ் (SARS) வைரஸ் பரவியது. இதனால் 30 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டு, 774 பேர் மரணம் அடைந்தனர். சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நோய் பரவி இருந்தது. 

கடந்த 2002ல் சீனாவில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்ட சார்ஸ், 2003ல் உலகளவில் பரவி இருக்கிறது. இந்த வைரஸின் தொடர்ச்சியே 2019ல் உலகளவில் 204 நாடுகளையும் முடக்கிய கொரோனா வைரஸ் என்ற கருதும் உள்ளது. 

சானிடைசர் பயன்பாடு

கொரோனா பரவிய காலத்தில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் கலந்த சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வலிறுத்தப்பட்டபோது போல, சார்ஸ் பரவிய 2002ம் ஆண்டும் சானிடைசர் பயன்பாடு கொண்டு வரப்பட்டது. 

இதையும் படிங்க: இஸ்ரேலுக்கு ஆதரவாக போரில் களமிறங்கும் அமெரிக்கா? குவிக்கப்படும் படைகள்.!

அப்படியாக, தைவான் நாட்டை சேர்ந்த 45 வயது பெண்மணி ஒருவர், ஆல்கஹால் கலந்து நாம் குளித்தால் உடலில் இருக்கும் ஒட்டுமொத்த கிருமியும் இறந்துவிடும் என எண்ணி இருக்கிறார். இதற்காக பல பாட்டில்கள் சாராயம் வாங்கி தனது குளிக்கும் தொட்டியில் ஊற்றி இருக்கிறார். 

ஆல்கஹால் உயிரை பறித்தது

பின் அதில் குளித்துக்கொண்டு இருந்த இளம்பெண்ணின் உடலில் ஊடுருவிய ஆல்கஹால், அவரின் உயிரையே பறித்து இருக்கிறது. முதல்நாள் இரவில் 11 மணியளவில் குளிக்கச்சென்றவர், மறுநாள் காலை 11 மணியளவில் குடும்பத்தினரால் சடலமாக மீட்கப்பட்டார். 

பிரேத பரிசோதனையில் அவரின் உடலில் ஆல்கஹால் 1.35% முழுவதுமாக கலந்து அம்பலமானது. அவரின் வியர்வை வெளியேற்றும் நுண் துளைகள் வழியே ஆல்கஹால் அவரின் உடல் முழுவதும் பாய்ந்து இருந்தது தெரியவந்துள்ளது. தற்போது இந்த செய்தி விழிப்புணர்வுக்காக மீண்டும் பிரசுரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹிஸ்புல்லாவின் வான்வழித்தாக்குதலை வானிலே முறியடித்த இஸ்ரேல்..!