இஸ்ரேலுக்கு ஆதரவாக போரில் களமிறங்கும் அமெரிக்கா? குவிக்கப்படும் படைகள்.!



US Send Troops to Middle East for SUpport Israel 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடங்கி ஓராண்டு நிறைவுபெறவுள்ளது. போரின் தொடக்கத்தில் இஸ்ரேல் 1400 க்கும் மேற்பட்ட குடிமக்களை இழந்தது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலியர்களை கொடூரமாக கொலை செய்தனர். இந்த கொலைகளுக்கு பழிவாங்கும் பொருட்டு, போரில் இழப்பை சந்தித்து களமிறங்கிய இஸ்ரேல் தற்போது வரை 39000 பேரை கொன்று குவித்துள்ளது. தங்களின் நாட்டை அழிக்க வந்தவர்களை தேடி வேட்டையாடுவோம் என்ற விஷயத்தில் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது. 

ஹமாஸ் தலைவர் ஈரானில் கொலை

இதனால் ஹமாஸ் குழுவினரின் பாதுகாப்பில் இருந்த அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக பலியாகும் சோகம் நடந்து வருகிறது. போரை அமைதியாக முடிக்க பலகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அது தோல்வியில் முடிந்தது. சமீபத்தில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான கனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்டார். ஈரான் அரசு அழைத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. இதனால் தங்களின் நாட்டு விருந்தினரை இஸ்ரேல் கொன்றது தவறானது. இஸ்ரேல் மீது ஈரான் போர்தொடுக்கும் என அந்நாட்டின் மதகுரு அறிவித்தார். 

இதையும் படிங்க: ஹிஸ்புல்லாவின் வான்வழித்தாக்குதலை வானிலே முறியடித்த இஸ்ரேல்..!

இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றினையும் ஈரான், லெபனான்

ஈரானை போல, லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் இஸ்ரேலை பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்கா தனது கடற்படை மற்றும் இராணுவத்தை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி இருக்கிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: பிறந்த குழந்தையின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த தடம்; அந்த நொடியில் பதறவைக்கும் சம்பவம்.!