குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ஹிஸ்புல்லாவின் வான்வழித்தாக்குதலை வானிலே முறியடித்த இஸ்ரேல்..!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடங்கி ஓராண்டு நிறைவுபெறவுள்ளது. போரின் தொடக்கத்தில் இஸ்ரேல் 1400 க்கும் மேற்பட்ட குடிமக்களை இழந்தது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலியர்களை கொடூரமாக கொலை செய்தனர்.
இந்த கொலைகளுக்கு பழிவாங்கும் பொருட்டு, போரில் இழப்பை சந்தித்து களமிறங்கிய இஸ்ரேல் தற்போது வரை 39000 பேரை கொன்று குவித்துள்ளது. தங்களின் நாட்டை அழிக்க வந்தவர்களை தேடி வேட்டையாடுவோம் என்ற விஷயத்தில் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது.
இதனால் ஹமாஸ் குழுவினரின் பாதுகாப்பில் இருந்த அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக பலியாகும் சோகம் நடந்து வருகிறது. போரை அமைதியாக முடிக்க பலகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அது தோல்வியில் முடிந்தது.
இதையும் படிங்க: பிறந்த குழந்தையின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த தடம்; அந்த நொடியில் பதறவைக்கும் சம்பவம்.!
இந்நிலையில், இஸ்ரேல் மீது லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹிஸ்புல்லா ஏவுகணைகளை வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு கொண்டு வான்வழி தாக்குதலை முறியடித்ததாக இஸ்ரேலும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மத்திய கிழக்கில் அடுத்த போர்? தாக்குப்பிடிக்குமா இஸ்ரேல்?.. ஈரான் தலைமை மதகுரு பகீர் அறிவிப்பு.!