வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
இந்திய அரசுத்துறை அதிகாரிகளின் செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு; கனடா மீது இந்தியா குற்றச்சாட்டு.!
பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் ஆதரவு சீக்கிய அமைப்பு, இந்திய அரசுக்கு எதிராக வெளிநாடுகளில் போராட்டம் நடத்துகிறது. குறிப்பாக கனடாவில் அதிகம் சென்று குடியேறிய காலிஸ்தானிய ஆதரவாளர்கள், கனடா அரசியலில் முக்கிய இடத்தை பெற்று, ராஜாங்க ரீதியாக தொல்லை கொடுக்கின்றனர்.
கனடாவின் குற்றச்சாட்டு
மேலும், இந்தியாவில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நபர்கள், கனடாவில் சென்று அந்நாட்டு குடிஉரிமை பெற்று தங்கியிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக கனடா அரசும் குரல் கொடுத்து வந்தது. அப்படியாக, காலிஸ்தான் அமைப்பு ஆதரவாளர்கள் சிலர் கொல்லப்பட்டதற்கு, இந்திய அரசு துணையாக இருந்தது என கனடாவின் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இருந்து அதானிக்கு எதிராக பறந்த நோட்டிஸ்.. நேரில் வந்து விளக்கம் அளிக்க உத்தரவு.!
இந்தியா - கனடா உறவுகள் விரிசல்
இதனால் இந்தியா - கனடா உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு பிரதமரும், முக்கிய அமைச்சர்களும் அவ்வப்போது இந்திய அரசுக்கு எதிராக தங்களின் குரலை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தி வருகின்றது.
ஒட்டுகேட்கப்படும் இந்திய அதிகாரிகளின் உரையாடல்
இந்நிலையில், கனடாவில் தூதரகம் உட்பட பிற செயல்பாடுகளில் இணைந்து பணியாற்றி வரும் இந்திய அதிகாரிகளின் செல்போன் உரையாடல்கள், தனிப்பட்ட அழைப்புகள், அந்தரங்க உரையாடல்கள் ஆகியவை கனடா அரசால் கண்காணிக்கப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புகார் தெரிவித்துள்ளது. இது இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் விரிசல் படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: பிரபல தாதா லாரன்ஸ் பீஷ்னோய் சகோதரர் அன்மோல் கைது?..