அமெரிக்காவில் இருந்து அதானிக்கு எதிராக பறந்த நோட்டிஸ்.. நேரில் வந்து விளக்கம் அளிக்க உத்தரவு.!



 US Govt Summoned to Adani about Bribery case 

இந்திய அரசின் சூரிய மின்சக்தி திட்டத்தை பெறுவதற்கு, இந்திய அரசுத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி இலஞ்சம் வழங்கியதாக கெளதம் அதானி உட்பட 7 பேருக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இலஞ்சம் வழங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

இந்த விஷயம் தொடர்பான விசாரணையை முன்னெடுத்திருந்த எப்பிஐ அமைப்பு, அதானியின் லஞ்ச விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, அவர் குற்றவாளி என்பதை தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க அரசை ஏமாற்ற முயன்றதாகவும், அமெரிக்க பங்குதாரர்களை மோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பிரபல தாதா லாரன்ஸ் பீஷ்னோய் சகோதரர் அன்மோல் கைது?..

அதானி பங்குகள் கடும் வீழ்ச்சி

இதனால் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கும் நிலையில், கென்யாவில் அதானியின் முதலீடுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வரும் 21 நாட்களுக்குள் அதானி நேரில் ஆஜராக அமெரிக்காவில் இருந்து சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்மனுக்கு நேரில் ஆஜராக மறுக்கப்படும் பட்சத்தில், அவரை கைது செய்ய பிடியாணை அமெரிக்காவில் இருந்து பிறப்பிக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.

இதையும் படிங்க: வாக்குவாதத்தில் விபரீதம்; கோடரியால் தந்தையை கொடூரமாக கொன்ற 33 வயது மகள்.!