முதலையின் வாயில் சிறுமியின் தலை; நெஞ்சை பதறவைக்கும் கொடூர மரணம்.!



Indonesia 5 Year Old Girl Crocodile Attack Death 

 

இந்தோனேஷியா நாட்டில் உள்ள பங்கா ரெக்கன்ஸி, புக்கிட் லயங் கிராமத்தில் வசித்து வரும் 5 வயது சிறுமி காகா. இவர் சம்பவத்தன்று தனது பெற்றோருடன் ஏரிக்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கு சிறுமி தனியாக இருந்தபோது, சிறுமியை திடீரென தாக்கிய முதலை ஒன்று, அவரை இழுத்துச்சென்றுள்ளது. முதலை தாக்குதலால் அதிர்ந்துபோன பெற்றோர், மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 40 விவசாயிகள் சுட்டுக்கொலை; நைஜீரியாவில் பயங்கரம்.!

World news

குழந்தையின் சடலம் தனித்தனியாக மீட்பு

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், நீண்ட நேர தேடலுக்கு பின்னர் குழந்தையின் சடலத்தை மீட்ட நிலையில், அவரின் தலையை காணவில்லை. 

இதனால் குழந்தையை இழுத்துச்சென்ற முதலை குறித்து தேடலில் இருந்த அதிகாரிகள், ஏரியில் இருந்த முதலையிடம் இருந்து வாயில் நசுக்கப்பட்ட நிலையில் இருந்த சடலத்தை மீட்டனர். 

இதையும் படிங்க: California Fire: கலிபோர்னியா காட்டுத்தீ; 24 பேர் உயிரிழந்த சோகம்.!