மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமூக வலைதளம் பயன்படுத்தியதால் ஆத்திரம்.!! தாய், தங்கையை கொடூரமாக கொலை செய்த நபர்.!!
பாகிஸ்தான் நாட்டில் சமூக வலைதளம் பயன்படுத்தியதற்காக 4 பெண்கள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒரு நபரை கைது செய்துள்ள அந்நாட்டு காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியிருக்கிறது.
தாய் உட்பட 4 பெண்கள் கொடூர படுகொலை
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள சாலிடர் பஜார் என்ற இடத்தில் பிலால் அகமது என்ற நபர் வாழ்ந்து வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று இவர் தனது தாய், தங்கை மற்றும் 2 உறவுக்கார பெண்கள் என 4 பேரை கொடூரமாக கழுத்தறுத்து படுகொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று இறந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். மேலும் அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சமூக வலைதளம் பயன்படுத்தியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்
இந்நிலையில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த பிலால் அஹமது, தனது குடும்பப் பெண்கள் சமூக வலைதளத்தை அதிகமாக பயன்படுத்தியதால் அவர்களை கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். தனது தங்கை புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால் அவருக்கு பாடம் புகட்ட நினைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தங்கையை கொலை செய்த போது மற்றவர்களும் பார்த்ததால் அவர்களையும் கொலை செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொலை.!!
குடும்பத்தால் சீரழிந்த திருமண வாழ்க்கை
மேலும் தனது குடும்பத்தினரால் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். தனது மனைவி மத அடிப்படைக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுபவர் எனக் கூறிய பிலால், தனது தாய் மற்றும் தங்கையின் நடவடிக்கைகளால் மனைவி தன்னைப் பிரிந்து சென்றதாகவும் தெரிவித்திருக்கிறார். சமூக வலைதளத்தை பயன்படுத்தியதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய எலிகள்... தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை.!!