திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொலை.!!
பாகிஸ்தான் நாட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இளம் பெண் ஒருவரை கைது செய்துள்ள காவல் துறையினர் அந்த பெண்ணின் காதலனை தேடி வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்பு
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்திருக்கிறார். இவர்களது காதலுக்கு இளம் பெண்ணின் குடும்பத்தார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் அந்த இளம் பெண் தான் காதலித்த இளைஞரை திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக தெரிவித்த பின்பும் அவரது குடும்பத்தார் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரொட்டியில் விஷம் வைத்து 13 பேர் கொலை
தங்களது திருமணத்திற்கு குடும்பத்தார் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என உறுதியான நிலையில் இளம் பெண் மற்றும் அவரது காதலர் இருவரும் சேர்ந்து பெண் வீட்டைச் சேர்ந்தவர்களை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தனது குடும்பத்தார் சாப்பிடும் ரொட்டியில் தனது காதலனுடன் சேர்ந்து விஷத்தை கலந்து இருக்கிறார் இளம் பெண். இதனைத் தொடர்ந்து ரொட்டி சாப்பிட்ட அனைவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு விரைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய எலிகள்... தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை.!!
காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை
இதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்தபோது அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தனது காதலனுடன் சேர்ந்து உணவில் விஷம் கலந்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரது காதலனை தேடி வருகின்றனர். காதலுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தான் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பதற வைக்கும் கொடூரம்... 10 முறை குத்தி கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி.!! 13 வயது சகோதரி கைது.!!