காதலியை இம்ப்ரஸ் செய்ய முயற்சி; சிங்கங்களுக்கு இரையான ஊழியர்.. இறுதிநிமிட வீடியோ.!



  in Uzbekistan Lion Kills Zoo Keeper When he made Video For impress Girl Friend 

உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள பார்கெண்ட் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மிருகக்காட்சி சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சிங்கங்கள் இருக்கும் பிரிவில் பாதுகாவராக வேலை பார்த்து வருபவர் எப். ஐரிஸ்குளோவ் (வயது 44). 

இவருக்கு பெண் தோழி ஒருவர் இருக்கிறார். அவரை இம்ப்ரஸ் செய்ய நினைத்த நபர், சிங்கங்களுடன் தான் பேசி விளையாடுவது போல வீடியோ எடுக்க முற்பட்டுள்ளார். 

கடித்துக்குதறிய சிங்கங்கள்

அப்போது திடீரென மூர்க்கமான சிங்கங்கள் அவரை தாக்கி இருக்கிறது. சிங்கங்களை வழக்கமாக அழைக்கும் சிம்பா என கூப்பிட்டு, அவற்றை தடுத்து நிறுத்த முற்பட்டபோதும், சில நொடிகள் கழித்து அவை தாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: பிறந்தநாள் பார்ட்டியில் வினோத போட்டி; விஸ்கி குடித்தவர் மாரடைப்பால் மரணம்.!

இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 17 அன்று நடந்துள்ளது. இறுதி தருவாயில் அவருக்கு நேர்ந்த பயங்கரம், அவர் தோழியை இம்ப்ரஸ் செய்ய நினைத்த கேமிராவில் அதிர்ச்சியூட்டும் வகையில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: பிறந்தநாள் பார்ட்டியில் வினோத போட்டி; விஸ்கி குடித்தவர் மாரடைப்பால் மரணம்.!